search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்துறை கேள்வி"

    ஆன்லைன் வழியாக புகார் பெற்று, அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யலாமா என சட்ட ஆணையத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பி உள்ளது. #FIR #Online #LawPanel
    புதுடெல்லி:

    போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்வது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 154-ல் விளக்கம் தரப்பட்டு உள்ளது. அதன்படி, பிடிவாரண்டு இல்லாமல் கைது செய்வதற்கு ஏற்ற குற்றங்களை செய்தவர் பற்றிய தகவல் பெற்றால், கட்டாயம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.இந்த நிலையில் ஆன்லைன் வழியாக புகார் பெற்று, அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யலாமா என சட்ட ஆணையத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பி உள்ளது.

    இதை சட்ட ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

    இதற்கு இடையே ஆன்லைன் வழியாக பெறப்படுகிற புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு சட்ட திருத்தம் செய்தால், இந்த வசதியை தவறாக பயன்படுத்தி மற்றவர்களை களங்கப்படுத்துகிற நிலை உருவாகும் என பல தரப்பிலும் தெரிவித்து உள்ளனர்.

    இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் சட்டத்துறை செயலாளர் ஒருவர் குறிப்பிடும்போது, “பிடிவாரண்டு இல்லாமல் கைது செய்வதற்கு உரிய குற்றங்களை செய்கிறபோது, சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால் அதை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் வழி காண வேண்டும்” என்று கூறினார்.  #FIR #Online #LawPanel
    ×